தவறான முடிவால் விபரீத முடிவெடுத்த அதிபர்!

குருணாகல் – மாஸ்பொத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் குருணாகல் – மரளுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது நபராவார். இவர் நேற்று (24) தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையொன்றிற்குள் உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதிபர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.